India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில், கந்தகோட்டம் அருள்மிகு கந்தப்பார் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி கந்த சஷ்டி பெருவிழா ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விஷேச வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இத்திருவிழா நவம்பர் 5 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறிய வகை பலசரக்கு கடைக்காரர்கள் மற்றும் பெட்டி கடைக்காரர்கள் சில்லறை விற்பனைக்காகவும், தீபாவளி பண்ட் நடத்துவோரும் தங்களுக்கு தேவையான கிப்ட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், காஞ்சிபுரத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் இன்றைய இருப்பு 41.54% உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 4.884 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்- 41.75%, புழல்- 74.76%, பூண்டி- 14.73%, சோழவரம்- 9.8%, கண்ணன்கோட்டை- 62.6 சதவீதமாக உள்ளது. மழை பெய்தால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. பின்னர், அவ்வப்போது வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்ததினத்தை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி இன்று (அக்.30) ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில், அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆயுதப்படை போலீசார் சார்பாக, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று (அக்.30) 25 வகையான ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதக் கண்காட்சியை, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ள அனைத்து பொதுமக்களும் வருகை தந்து இங்குள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டனர். அனுமதி இலவசம். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில், துணை கலெக்டர் நிலையிலான பதவிகளில் காலியாக இருந்த 2 பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமித்தும், இரு துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்தும் வருவாய் துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த மாநில வாணிப கழகத்தின் மாவட்ட மேலாளராக சுமதி என்பவரையும், கலால் பிரிவு உதவி கமிஷனர் பதவியிடத்திற்கு திருவாசகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் தக்காளி வரத்து குறைந்து 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆந்திராவில் தற்போது விளைச்சல் அதிகரித்து, தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் வீதிகளில் நடமாடும் கடைகளில் 3 கிலோ தக்காளி ரூ.100 விற்கப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார், தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களில் உள்ள தாசில்தார்கள் 11 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். குன்றத்தூரில் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, திடீரென வாலாஜாபாத் தாலுகாவிற்கு என பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவர் சான்று, ஆதார் அட்டை, UDID அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு) ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.