Kanchipuram

News November 7, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 7, 2024

சாம்சங் உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை

image

சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்து, போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளித்த உயர்நீதிமன்றம், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளது.

News November 6, 2024

திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், திருநங்கைகள் /திருநம்பிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினர். இந்நிகழ்வில், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் ஜ.சரவணக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 6, 2024

கைப்பந்து: காஞ்சிபுரம் அணியினர் 2ஆம் இடம்

image

முதல்வர் கோப்பை, மாநில அளவிலான கைப்பந்து போட்டி திருச்சியில் நடந்தது. இதில், பல்கலைகழகங்களுக்கு இடையே நடந்த மாணவியருக்கான கைப்பந்து இறுதி போட்டியில், சேலம் அணியும் காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலை., அணியும் மோதியது. இதில் காஞ்சிபுரம் மாணவியர் 2ஆம் இடத்தைப் பெற்றனர். இவர்களை நேற்று பல்கலை துணைவேந்தர் சீனிவாசு உள்ளிட்டோர் பாராட்டி நினைவுப்பரிவு வழங்கினார்.

News November 6, 2024

ரேஷன் கடையில் வேலை: நாளை கடைசி நாள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <>ஆன்லைனில்<<>> விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரத்தில் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். ஷேர் பண்ணுங்க

News November 6, 2024

அதிகாரிகளிடம் வாக்குவாதம்: 9 பேர் மீது வழக்கு

image

பரந்தூர் விமான நிலைய திட்டம் அமைய உள்ள பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டனர். நேற்று நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்கு சென்றபோது, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News November 6, 2024

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

image

ஒழையூர் ஊராட்சி மோட்டூர் தொடக்க பள்ளியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏகாம்பரத்துக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஊராட்சித்தலைவர் குமரகுரு சார்பில், கிராம மக்கள், மங்கல இசை மற்றும் தாரை தப்பட்டையுடன் ஆசிரியரை, திருவீதி உலா அழைத்து வந்து, ஆர்த்தி எடுத்து, சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

News November 6, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று (05.11.2024) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உடன் இருந்தனர்.

News November 5, 2024

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா

image

ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில், பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சார்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது. வரும் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். மத்திய அரசின் சான்றிதழ் அளிக்கப்படும்.

News November 5, 2024

கணக்கெடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

image

பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டம் அமைய உள்ள இடத்தில், வீடுகளை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நெல்வாய் கிராமத்தில் உள்ள மக்கள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட முயன்றனர். அப்போது, கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.