India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்த சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மேலும், இங்கு வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குடிநீர், தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆன்லைன் வாயிலாக வரி வசூலிக்கும் திட்டம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இருந்த போதிலும், ரூ.21.86 கோடி நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரா என்பவர் நேற்று (மார்.30) கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,600 பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வீராவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரா மீது ஒரு கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் District Early Intervention Centre (DEIC) திட்டத்திற்காக 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் 23,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் 10.04.2025 மாலை 5.45 மணி வரை <
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த RRTS ரயில் வர உள்ளது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில்,140 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை, காஞ்சிபுரம் இடையே தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரி சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறுகையில், ”அல்லாபாத் ஏரிக்குள் இருக்கும் அனைத்து மான்களையும் நாங்கள் பிடிக்க உள்ளோம். அவற்றை பாதுகாப்பாக பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள காப்பு காடுகளில் விடுவோம்” எனத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக கோபி (59) பணிபுரிந்து வந்தார். இவரை, நேர்முக உதவியாளர் பணியில் இருந்து கலெக்டர் அதிரடியாக விடுவித்தார். அந்த பணியிடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கவில்லை. கலெக்டரின் செயலுக்கு முறையான விளக்கம் அளித்து, மீண்டும் மாநில ஊரக வளர்ச்சி துறையில் இருந்து பணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நேற்று (மார்.29) கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மழைநீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற விஷயங்கள், முக்கிய விவாத பொருளாக கிராம சபையில் பேசப்பட்டன. இதுசம்பந்தமாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Sorry, no posts matched your criteria.