Kanchipuram

News November 19, 2024

8,650 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள முதற்கட்ட முகாமாக கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,401 ஓட்டுச்சாவடிகளில் நடைபெற்றது. பெயர் சேர்க்க – படிவம் 6, பெயர் நீக்க – படிவம் 7 உள்ளிட்ட விண்ணப்பங்களை வழங்கினர். முதற்கட்டமாக நடந்த முகாமில், 15,297 பேர் மனு அளித்துள்ளனர். இதில், 8,650 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

News November 19, 2024

விற்பனையாளர்கள் பணி: விண்ணப்பம் தொடக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 35 விற்பனையாளர்கள் பணிக்கான விண்ணப்பங்களை நேற்று (நவ.18) முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் டிச.5ஆம் தேதி வரை நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 19, 2024

மாநகராட்சி கூட்டத்துக்குகு முன்பே கையெழுத்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், மாதந்தோறும் மாநகராட்சி வளர்ச்சி குறித்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், மேயரின் ஆதரவாளர்கள் என்பதால் 51ஆவது வார்டு கவுன்சிலர் சங்கர், 44ஆவது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே வருகை பதிவு கையெழுத்திட்டு உள்ளதாக பிற கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News November 19, 2024

காஞ்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தேர்வு

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளராக இருந்த நேரு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 3 ஆண்டுக்கு தலைவராக நீடிப்பார். இவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

News November 18, 2024

ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்

image

காஞ்சி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என்று விவசாயிகள் சங்கம் சார்பில், சிறுகாவேரிபாக்கம் பகுதியில் நாளை (19-11-2024) காலை 10 மணி அளவில் B.D.O அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டார்.

News November 18, 2024

காஞ்சிபுரத்தில் பெருகும் நாய்க்கடி பாதிப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஓராண்டுக்கு சராசரியாக 3000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2022-ல் ஜனவரி முதல் டிசம்பர் வரை 3,231 பேரும், 2023-ல் 3,632 பேரும், 2024 ஆகஸ்ட் வரை 1,350 பேரும் காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

News November 18, 2024

காஞ்சிபுரத்தில் டெண்டர் நடக்கும் தேதி அறிவிப்பு

image

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி டெண்டர் நடைபெற உள்ளது. டெண்டர் தொகையாக 50 லட்ச ரூபாயும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயும் விதிக்கப்பட்டது. உத்தரவாத தொகை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்ததால் 50 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி டெண்டர் நடைபெறுவதாக வியாபாரிகள் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

News November 18, 2024

வாலாஜாபாத்: 1,00,000 பனை விதைகள் நடவு விழா

image

வாலாஜாபாத் ஏரிக்கரை மற்றும் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதை நடவு விழா நேற்று (17.11.2024) தன்னார்வலர் சரண் தலைமையில் நடைபெற்றது. மேலும் வாலாஜாபாத் பேரூர் கவுன்சிலர் லயன் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதை நடவு விழாவில் பங்கேற்றார்.

News November 17, 2024

குழந்தை இறப்பிற்கு காரணமான நிறுவனத்திற்கு சீல்

image

குன்றத்துாரில் இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘யூனிக் பெஸ்ட் கன்ட்ரோல்’ நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அதன் அலுவலகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகள் ‘சீல்’ நேற்று வைத்துள்ளனர். பின்னர், “இம்மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். மருந்து வைக்கப்பட்டபின், வீட்டில் யாரும் தங்க வேண்டாம்” என அதிகாரிகள் கூறினர்.

News November 17, 2024

இன்று 2ஆவது நாள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய இன்று (நவ.17) 2ஆவது நாளாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க உள்ளிட்ட சேவைகளைப் பெற அப்பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.