India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மக்கள் தாட்கோ மூலமாக கடன் உதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்றது. எந்த விதமான கடன் உதவிக்கு விண்ணப்பித்துள்ளார்கள் மற்றும் கடன் உதவி அளித்தால் மீண்டும் பணம் செலுத்துவார்களா என்பது குறித்து நேர்முகத் தேர்வு மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் நடைபெற்றது.
நல்லாத்துார் பாவாடை என்பவரின் கூரைவீடு, கூத்தக்குடி குள்ளம்மாளின் தொகுப்பு வீடு, மூலசமுத்திரம் வீரமணியின் தொகுப்பு வீடு, எ.சாத்தனுார் பாவாடை என்பவரின் ஓட்டு வீடு, பெருமாள் மனைவி வெள்ளியம்மாளின் அட்டை வீடு உள்ளிட்ட 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவர் மூக்கில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி தேடப்பட்ட நிலையில், கொலை குற்றவாளியான சுரேஷ் என்பவரை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் 2024-25 ஆண்டு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 4200 வீடுகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் தனி நபர்கள் சிலர் வீடு வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சில புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது 1994 ஊராட்சி சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. சென்னைக்கு அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையின் நேற்றைய நீர்மட்டம் 30 கனஅடியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து தற்போது 34 அடியாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 15.10.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100க்கிற்கு டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரிசிவந்தியம், சங்கராபுரம், கல்வராயன் மலை உள்ளிட்ட ஒவ்வொரு ஒன்றிய வாரியாக மக்கள் அவசர காலத்திற்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ள புதிதாக ஒவ்வொரு ஒன்றியத்திற்கு என ஒரு நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.