Kallakurichi

News October 31, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 31, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான இன்று கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 31, 2024

கள்ளக்குறிச்சி மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கள்ளக்குறிச்சி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 30, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடுகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (30.10.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 30, 2024

கள்ளக்குறிச்சி அருகே சாலை மறியல்;46 பேர் மீது வழக்கு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் இன்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைப்பது தொடர்பான பிரச்சனையால் கிராம மக்கள் கச்சிராயபாளையம் மாதவச்சேரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி கச்சிராயபாளையம் போலீசார் 26 ஆண்கள், 20 பெண்கள் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News October 30, 2024

கள்ளக்குறிச்சி:எதிர்க்கட்சி தலைவரை விமர்சித்த அமைச்சர்

image

வீரசோழபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பழைய பல்லவியை பாடி வருகிறார். திமுக தனது கொள்கையில் இருந்து என்றும் மாறாது. ஒன்றிய அரசிடமிருந்து நிதி கேட்டு வாங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் பங்கைதான் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.இதற்காக தமிழக முதல்வர் பிரதமரை பார்ப்பது தவறா? என்று கேள்வியெழுப்பினார்.

News October 30, 2024

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ளலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 70,000 மேற்பட்டோர் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை மூலம் இன்று வழங்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் பெறுவோர் ரேஷன் கடைகளில் நேரடியாக வேட்டி சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 30, 2024

 கள்ளக்குறிச்சி  மாவட்ட  ஆட்சியர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், அதற்கு தேவையான மூலப்பொருட்கள் பதிக்க வைத்தல் அதுமட்டுமின்றி போதை பொருட்கள், குட்கா, கஞ்சா போன்ற பொருள்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

News October 29, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (29.10.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 29, 2024

கள்ளக்குறிச்சியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

image

குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையம்,மணிக்கூண்டு பகுதி 2 இடங்களில் உயர்கோபுர கண்காணிப்பு கூண்டுகள் அமைத்துள்ளனர்.திருக்கோவிலுாரில் 3,சங்கராபுரத்தில் 1,மணலுார் பேட்டையில் 1,உளுந்துார்பேட்டையில் 1,சின்னசேலத்தில் 1,தியாகதுருகத்தில் 1 என மொத்தம் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது