Kallakurichi

News November 18, 2024

இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இது குறித்த கூடுதல் தகவல்களை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News November 18, 2024

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் உள்ள வீட்டின் முன்பு உள்ள புதர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயவர்மன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது அத்தீப், சையத் ஷாநாவஸ், மல்லாபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 1086 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 17, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

அதிமுக தலைமை கழக பொறுப்பாளர்கள் இன்று வருகை

image

உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மகாலில் இன்று அதிமுகவின் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்யவும், அதிமுக உறுப்பினர்கள் உரிமை சீட்டுகள் முழுமையாக உறுப்பினர்களுக்கு சென்றடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்திட அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் வருகை தர உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அறிவித்துள்ளார்.

News November 17, 2024

அதிமுக வர்த்தக அணி செயலாளராக அருண்குமார் நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நகர அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக நகர வர்த்தக அணி செயலாளராக அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

News November 17, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், கச்சராபாளையம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய பல பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 06.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 இடங்களில் மழை அளவிடும் கருவி பொருத்தி அளவீடு செய்வதில் 306 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது . 

News November 16, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.11.2024) இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 100 என்ற எண்ணை செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News November 16, 2024

கள்ளக்குறிச்சிக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 16, 2024

சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் எம்.பி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 16, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை இளைஞர் திறன் திருவிழா

image

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நாளை 17ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு துவங்குகிறது. தகுதி உடைய 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!