Kallakurichi

News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

News November 24, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை

image

தியாகதுருகம் துணை மின் நிலையத்திலிருந்து மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள உள்ளதால் நாளை (25/11/2024) காலை 9 மணி முதல் 5:00 மணி வரை தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, நூரோலை, லாலாபேட்டை, பழையசிறுங்கூர், சூலாங்குறிச்சி, ரிஷிவந்தியம் மடம், வீரசோழபுரம், பிரதிவிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் சாமிநாதன் கூறியுள்ளார்.

News November 23, 2024

நிதி நிறுவனத்தில் 1,82,000 பணத்தை திருடிய நபர் கைது

image

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உடன் பணியாற்றுபவர்களுக்கு மயக்க மாத்திரை கொடுத்து 1,82,000 பணத்தை திருடி சென்ற நபரை தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்று குற்றவாளி ரகுபதி ரெட்டியை கைப்பற்றி அவரிடம் இருந்த 1,60,000 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 23, 2024

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (23.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையினரை கண்டித்து வரும் திங்கட்கிழமை முதல் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பகுதியில் உள்ள வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று அறிவித்துள்ளனர்.

News November 23, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் கூறிய தகவல் 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1162 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் முன் பருவ கல்வி பயிலும் வகையில் 32,594 குழந்தைகள் முன் பருவ கல்விகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு குழந்தைகளுக்கு தினசரி எடை எடுக்கப்பட்டு சத்தான உணவுகள் சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது என  கலெக்டர் கூறினார்.

News November 23, 2024

துணை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை துணை ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் நேரில் ஆய்வு செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர் பட்டியல் விண்ணப்பம் குறித்து கேட்டறிந்தார்.

News November 23, 2024

412 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் இன்று 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.கூட்டத்தில், பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

News November 23, 2024

கள்ளக்குறிச்சியில் வாக்காளர் அடையாள அட்டை முகாம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தி அனைத்து முதல் தலைமுறை வாக்காளர்களும் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!