Kallakurichi

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் லிங்க்

News March 21, 2025

களைக்கொல்லி குடித்தவர் பலி

image

கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

News March 21, 2025

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு இன்று விசாரணை

image

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் தொடர்புடைய 37 சிறார்கள், கடந்த பிப்.21 நீதிமன்றத்தில் ஆஜராகினர். பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 1,100 பக்க இறுதி அறிக்கை நகல், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.

News March 20, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒருங்கிணைந்த மரக்கன்றுகள், நாற்றங்கால் பண்ணை அமைத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

News March 20, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு வேலை ரூ.60,000 வரை சம்பளம்

image

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துத்துறையின் கீழ், கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 40வயது வரை. மார்ச்.25ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

image

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.

News March 20, 2025

கள்ளக்குறிச்சியில் நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரியலூரிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த நபர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 20, 2025

உளுந்தூர்பேட்டையில் விமான ட்ரோன் பூங்கா

image

உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடு பாதையில் விமான பரிசோதனைக் கூடம், விமானப் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசிடம் நிலத்தை வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் இன்று(மார்.19) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

News March 19, 2025

கள்ளக்குறிச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல் 

image

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என  ஆட்சியர் தகவல்.

error: Content is protected !!