India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டுரோடு அருகே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மீது லாரி மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் வரும் ஜன.3ஆம் தேதி முதல் தொடங்கி வரும் ஜன.31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த ஏழு தடுப்பூசி குழுக்கள் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 9 ஊ.ஒன்றியத்தில் நடைபெறும் எனவே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவசாயிகள் வேலையாட்கள் பற்றாக்குறை போக்கும் வகையில் 2024.25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர் கருவி வாங்கிட ரூ.1.20லட்சம் மானியம் மற்றும் களையெடுப்பு கருவி, ரூ.63,000 மானியத்திலும் விவசாயிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அணுகவும் கலெக்டர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (24.13.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
உளுந்தூர்பேட்டை-விருதாச்சலம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு கனமழையால் கட்டிட சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் நகர மன்ற தலைவர் கே. திருநாவுக்கரசு மற்றும் ஆணையர் ஆகியோர் உடன் இருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பூ.மலையனூர்-நொனையவாடி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 474 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று வருவாய்த்துறை காவல்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனுக்களும் பொதுமக்களிடமிருந்து 462 மனுக்களும் என மொத்தமாக 474 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.