India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வர் கோப்பை – 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்பதிவு செய்ய இறுதி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வீரர்கள் மற்றும் அணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சந்தைப்பேட்டையை சேர்த்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு வசந்தியுடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் வசந்தி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வசந்தி வீட்டிற்கு சென்ற ஜாகீர் உசேன், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். வசந்தியின் புகாரின் பேரில் ஜாகீர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) இரவு 10 மணி முதல், நாளை சனிக்கிழமை (16.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்தொரசலூரை சேர்ந்த தங்கம்மாள் ஆகஸ்ட் 9-ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள குளத்துக்கு அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வாழியே சென்ற காட்டனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் தங்கம்மாள் மீது பைக்கால் தெரியாமல் மோதியுள்ளார். இதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை கள்ளக்குறிச்சி விஐபி கார்டன் முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக சரத்குமார் இன்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் அருகே அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும், இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் தரும் சிவன் பெருமானை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் வழியே இழந்த சொத்துக்கள், அந்தஸ்த்து மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க.
கள்ளக்குறிச்சி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் இந்த <
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.