Kallakurichi

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.<> இந்த லிங்கை <<>>கிளிக் செய்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

News April 6, 2025

கல்வராயன் மலையில் கைம்பெண்கள் கட்டிய வரி

image

பெண்கள் மேலாடை அணிய வரி செலுத்தியது பற்றி தெரிந்தவர்களுக்கு கைம்பெண்களுக்கான ‘முண்டச்சி வரி’ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வராயன் மலையை நிர்வகித்த ஜாகீர்தார்கள் வசூலித்த வரிகளில் ஒன்று இது. பெண்ணொருத்தி கணவன் இறந்துவிட்டாலோ (அ) பிரிந்து வந்துவிட்டாலோ கட்டாயம் மறுமணம் செய்து கொள்ளவேண்டும். திருமணம் செய்யவில்லை என்றால் வரி செலுத்த வேண்டும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும்,மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 6, 2025

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

News April 5, 2025

குழந்தை வரம் தரும் அங்காளம்மன்

image

உளுந்தூர்பேட்டை சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயிலின் மூலவராக உள்ள பெரிய அங்காளம்மன் ‘பெரியாயி’ என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனாலேயே திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க….

News April 5, 2025

12வது பாஸ் போதும், ரூ.71,900 வரை சம்பளம்

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News April 5, 2025

இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மின் பகிர்மான கோட்டங்களில் இன்று மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம், இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய கோட்டங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் முகாம்கள் நடக்க உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

இளம் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் டால்னியா. இவர் சென்னையில் பணிபுரிகிறார். நேற்று, வீட்டில் இருந்த டால்னியாவை முன்விரோத தகராறு காரணமாக அவரது சித்தப்பாக்கள் இருவரும் தாக்கினர். இதில், பலத்த காயம் அடைந்த இவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!