Kallakurichi

News November 11, 2024

இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சாலை வசதி, மின்விளக்கு வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்களிடம் இருந்து 470 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 19 மனுக்கள் என 489 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை தக்காளி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.55, சின்ன வெங்காயம் 60, பெல்லாரி ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.40-50, முருங்கைக்காய் ரூ.70, பீர்க்கங்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.36, பாகற்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.48, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.70, கேரட் ரூ.80, கொத்தவரை ரூ.40, பூசணிக்காய் ரூ.30, பரங்கிக்காய் ரூ.30, இஞ்சி ரூ.90 விற்பனை ஆகிறது.

News November 11, 2024

கள்ளக்குறிச்சியில் நவ.14 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வரும் நவ.14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தி.மலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டக்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

image

திருக்கோவிலூர் வட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாலூர் கிராமம் உள்ளது. இதில் நேற்று உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேமாலூர் ஏரி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினரை நியமித்து மேமாலூர் காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

News November 10, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட 300 அரசு பள்ளி மாணவிகளுக்கு கணினி பயிற்றுநர்களைக் கொண்டு குறுகிய கால கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News November 10, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை தக்காளி ரூ.30 உருளைக்கிழங்குரூ. 55, சின்ன வெங்காயம் 50, பெல்லாரி ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.40 முருங்கைக்காய் ரூ.70 பீர்க்கங்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.36, பாகற்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.48, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.70, கேரட் ரூ.80, கொத்தவரை 40, பூசணிக்காய் ரூ.30, பரங்கிக்காய் ரூ.30, இஞ்சி ரூ.90 விற்பனை ஆகிறது.

News November 10, 2024

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம்

image

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான குறைதீர்வு முகாம் இதற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இந்த முகாமில் பணி மாறுதல் மற்றம் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

News November 9, 2024

மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

News November 9, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (9.11.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News November 9, 2024

இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் காமராஜ் என்ற இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் காமராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.