Kallakurichi

News March 26, 2025

கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பாக மாவட்ட அளவிலான முதல் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் இன்று (26.03.2025) புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 26, 2025

போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News March 26, 2025

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 42 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

News March 26, 2025

10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

இளம் பெண் விபரீத முடிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அந்தியூரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரேமா, 30. இந்த தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 24ம் தேதி காலை மீண்டும் ஏற்பட்ட பிரச்னையால், மனமுடைந்த பிரேமா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 25, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

News March 25, 2025

உங்கள் கைரேகையை பதிவு செஞ்சிட்டீங்களா?

image

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

பைக்கில் புகுந்த பாம்பு

image

உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (45). இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டுச் சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

News March 24, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்.

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.03.2025) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவித்துள்ளது ஆகவே பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரமும் அழைக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News March 24, 2025

கள்ளக்குறிச்சி: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தெற்கு காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற இளைஞர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் நேற்று(மார்.24) இரவு சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!