Kallakurichi

News March 28, 2025

சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த 17 வயது சிறுவன்

image

உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த, 7 வயது சிறுவன், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து புகாரின் பேரில் எடைக்கல் போலீசார், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை, விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவர், ஏற்கனவே பைக் திருட்டில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் விவசாயிகள் சார்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

News March 27, 2025

2 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் கமலம் ஆகிய இருவருக்கும் துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பன்னீர்செல்வம் திருவள்ளூர் மாவட்டத்திலும் கமலம் கடலூர் மாவட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 27, 2025

ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல்<> இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 26, 2025

கள்ளக்குறிச்சி  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பாக மாவட்ட அளவிலான முதல் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் இன்று (26.03.2025) புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 26, 2025

போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த போலி வழக்கறிஞர் வீரன் என்பவர் மீது திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக புகார் கொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று திருக்கோவிலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வெங்கடேஷ்குமார் நீதிபதி போலி வழக்கறிஞர் வீரன் என்பவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News March 26, 2025

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 42 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

News March 26, 2025

10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

இளம் பெண் விபரீத முடிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அந்தியூரை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பிரேமா, 30. இந்த தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த, 24ம் தேதி காலை மீண்டும் ஏற்பட்ட பிரச்னையால், மனமுடைந்த பிரேமா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!