India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் குடிமைப் பொருள் வட்டாட்சியர் பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை திட்டங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம் எஸ் பிரசாந்த் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய சுகாதாரத் துறை திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து போலீசார் நேற்று காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீவிர வாகன சோதனை மேல் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகனங்களுக்கு உரிய சான்றிதழ்கள் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், மது போதையில் வாகனம் இயக்குதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 பேரும் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மாநில அளவில் மொத்தம்,100 பேருக்கு விருதும், தலா ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. கலெக்டர் குழுவினர் தகுதி வாய்ந்த, 3 தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை தேர்வு செய்வர்.இதற்கான, விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் தகவல்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சாபிள்ளை.இவர், சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில், துாக்கு ஈட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் வட்டம் ஆரூர் கிராமத்தில் இன்று காலை 11.00 மணியளவில் தங்க நகையை பாலீஷ் செய்து தருவதாக கூறி, நகையை பறித்துக் கொண்டு ஓட முயன்ற இரு வட மாநிலத்தவர்களை, சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள், கட்டிவைத்து அடித்து உதை கொடுத்துள்ளனர். பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூரில் இன்று பெற்றோர்களை கொண்டாடுவோம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் உளுந்தூர்பேட்டையில் உள்ள பழனியர் விடுதிக்கு வருகை தந்தார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், உளுந்தூர்பேட்டை நகர திமுக ஒன்றிய செயலாளர் வசந்தவேல் வழிஅனுப்பி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.