India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை மறுதினம் நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காந்திஜெயந்தி முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும், உத்தரவை மீறி செயல்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இதில் பொதுமக்களிடமிருந்து 419 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 21 மனுக்கள் என மொத்தமாக 440 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வராயன்மலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்ட விரோதமாக போதைப்பொருள்கள், கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊரல்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் ஈடுபடும் நபர்கள் ஓராண்டு தடுப்பு கவுல் சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதை ஒட்டி பந்தல் அமைக்கும் பணி,கொடிகள் கட்டும் பணிகள்,மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை மாநிலத் தலைவர் தொல் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்.
கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு வனப்பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருவங்காடு வனப்பகுதியில் ரெய்டில் ஈடுபட்டனர்.அங்கு சாராய ஊறலை பார்த்த போலீசார் ஊறலை அழித்தனர்.இதில் அண்ணாமலை என்பவரை கைது செய்தனர்.இப்பகுதியில் சாராய உற்பத்தி என்பது தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து, இஞ்சி விலை உயர்ந்து காணப்பட்டு வந்த நிலையில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு கிலோ இஞ்சி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஏகேடி பள்ளியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.