Kallakurichi

News October 2, 2024

கள்ளக்குறிச்சி எஸ்பி கடும் எச்சரிக்கை

image

உளுந்தூர்பேட்டையில் இன்று விசிக சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 2, 2024

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் மாற்றம்

image

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி திருவள்ளூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக ஆரணி நகராட்சி ஆணையர் பணிபுரிந்து வந்த சரவணன் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 2, 2024

கள்ளக்குறிச்சி அதிமுக பொறுப்பாளராக சங்கரதாஸ் நியமனம்

image

அதிமுகவின் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணியினை துரிதப்படுத்தும் வகையில் பொறுப்பாளர்கள் தமிழக முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சங்கரதாஸ் நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News October 2, 2024

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் வயது முதிர்ந்த தமிழர்கள் அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதாவது 1.1.2024 அன்று தேதியில் 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் www.tamilvalarchithurai.tn.gov.in ஐடியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

News October 1, 2024

கள்ளச்சாராய மரண வழக்கு – 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

image

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தனர். 3 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News October 1, 2024

கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது ஒன்றியங்களில் அமைந்துள்ள 412 ஊராட்சிகளிலும் நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

News October 1, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 1.10.2024 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News October 1, 2024

அரசு அங்கீகார அட்டைகளை ஒப்படைக்க முடிவு

image

புதுப்பட்டு அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அத்தியாவசிய தேவைகளை செய்து தராவிட்டால் ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News October 1, 2024

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய மாவட்ட செயலாளர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 30, 2024

மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணி குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு பணி குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.