Kallakurichi

News March 22, 2024

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிட உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் தேவதாஸ் போட்டியிடுவார் என பாமக தலைமை அறிவித்துள்ளது.

News March 22, 2024

அமைச்சர் வாகனத்தில் சோதனை

image

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலை பகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் இன்று (மார்ச்.22 )ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலுவின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

News March 21, 2024

கள்ளக்குறிச்சி: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.

News March 21, 2024

கள்ளக்குறிச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற கள்ளக்குறிச்சித் தொகுதியில், இந்த முறை திமுக-வின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றியுள்ளார்.

News March 21, 2024

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் இவர் தான்

image

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

கள்ளக்குறிச்சி எம்.பி-க்கு மீண்டும் சீட் வழங்க மறுப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பொன் கௌதமசிகாமணி. இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திமுக தலைமைக் கழகம் வாய்ப்பு மறுத்துள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக இன்று மலையரசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் வேட்பாளராக மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<> கிளிக் <<>>செய்யவும்.

News March 19, 2024

கள்ளக்குறிச்சி: நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!