India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகம் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முன்னாள் அமைச்சர் மோகன் வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில் இன்று காலை சண்முகா அரங்கில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிகவினரிடம் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேமுதிக கூட்டணி கட்சியினர் தன்னை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி அருகே கூவாகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இத்தாண்டு இக்கோவிலில் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார் மற்றும் பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தல் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் வார்டு கவுன்சிலர்கள், ஆலோசனைக் கூட்டமானது கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமையில், வடக்கனந்தல் பேரூர் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் பரபரப்பான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான தொண்டர்கள் பெண்கள் என வெயிலை கூட பொருட்படுத்தாமல் சிறப்பாக ஓட்டு கேட்டு வருகின்றனர். பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள அதிமுகவினர் பட்டாசு மேல தாளங்கள் உடன் அதிமுக தொண்டர்களுக்கும் அளித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன், கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மாட்டு வண்டியை ஓட்டியபடி வாக்குகளை சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தனர்.
நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான இன்று பாமக உட்பட 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 13 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.