Kallakurichi

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News March 30, 2025

தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை

image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரியில் பணி புரியும் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக CM cellக்கு க்கு புகார் சென்றுள்ளது. தூய்மை பணியாளருக்கு ஒப்பந்த மேளாளர் ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பணி புரிபவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துரை அதிகாரிகள் ரவிச்சந்திரனிடமும், தூய்மை பணியாளர்களிடமும் விசாரணை செய்து வருகின்றது.

News March 30, 2025

வட்டார கல்வி அலுவலக அறையில் 15 ‘டேப்லட்’ திருடு

image

தியாகதுருகம் ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, ‘டேப்லட்’ எனும், கையடக்க கணினிகள் மொத்தம், 218 வந்தன. இதில், 191 டேப்லட்டுகள் ஆசிரியர்களுக்கு தரப்பட்ட நிலையில், மீதம், 27 ‘டேப்லட்’கள் அறையில் இருப்பு வைக்கப்பட்டன. நேற்று பொருட்களை எழுத்தர் சரிபார்த்த பொழுது 15 டேப்லட்டுகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். 

News March 29, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
மகரூர் கைலாசநாதர் கோயில்,
தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்,
ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

அம்மாவாசை முன்னிட்டு இங்கெல்லாம் சிறப்பு பூஜைகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமாவாசை முன்னிட்டு, எங்கெல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இன்று அமாவாசை முன்னிட்டு கள்ளக்குறிச்சி காரனூர் ஓம் சக்தி அம்மன், கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோவில், முருகன் கோவில், வடக்கனந்தல் ஆவுடையார் கோவில், சிவன் கோவில், தியாக பாடிய அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

News March 29, 2025

இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

image

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக அன்பழகன் பணிபுரிகிறார். இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், பாடம் நடத்திய போது, வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து பெற்றோர் அவர் மீது புகார் தெரிவித்தனர். அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News March 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 28.3.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்

News March 28, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கல்லூரிகளில் முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!