India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத வகையில் கள்ளக்குறிச்சியில் இன்று 108° செல்சியஸ் வெயில் கொளுத்தி வருகிறது. அது மட்டுமன்றி வெப்ப அலையும் அதிகளவில் இருந்து வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடித்தல், தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை பருகவேண்டும். மேலும் அதிக அளவில் மோர், கூழ், இளநீர், எலுமிச்சைபழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவுரையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன்குமார் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க பொருளாளராக இளையராஜா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கனியாமூர் அருகே இன்று காலை வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் டயர் வெடித்ததில் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆனந்த் என்பவருக்கு கால் குறைவு ஏற்பட்ட நிலையில் விஜய் என்பவர் இந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில்,தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாசுதேவனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த கல்லூரியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மேல் நாரியப்பனூர் கிராமத்தில் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே நிலையத்தை சுற்றி அதிக அளவு குப்பைகள் காணப்படுகின்றன. இதனால் ,ரயில்வே நிலையத்தின் தூய்மையானது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இதை அகற்ற ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே இன்று(ஏப்ரல்.29) சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் இருவரும் மாமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று எவிடன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற கோரி நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் எவிடன்ஸ் கதிர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வினோத் என்பவர் வாகன விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி வட்டம்,கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (28.04.2024) கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள சிறுவனது வீட்டிற்கு நேரில் சென்று, உடலுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.