India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று வெளியான நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் செயல்பட்டு வரும் மவுண்ட் பார்க் பள்ளியில் படித்து வரும் சாய் ஸ்ரீ என்ற மாணவி 496 மதிப்பெண்களை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இவர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 10 ஆயிரத்து 375 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 8597 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 82.86% ஆக உள்ளது அதேபோல் 9791 மாணவிகள் தேர்வு எழுதியதில் 8,876 மாணவிகள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 91.6% ஆக உள்ளது. மாணவர்களை விட 8.2% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.83 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86.83 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.86 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.06 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று இளங்கலை (பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் ) மற்றும் நான்கு இளம் அறிவியல் (பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் , வேதியியல் மற்றும் இயற்பியல்)பாட பிரிவுகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 6-ம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் மே 20-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குடிநீர் குறைதீர் கட்டுப்பாடு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04151- 222001, 04151-222002 என்ற தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
கள்ளக்குறிச்சி நல்லாத்தூர் கிராமத்தில் சேவையை கடவுள் மாற்றம் என்ற அறக்கட்டளை சார்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் நடிகர் லாரன்ஸ் கலந்துகொண்டு டிராக்டரை வழங்க வருகை தந்துள்ளார். அப்பொழுது லாரன்ஸ் பார்க்க இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சரண்யாவிற்கு சொந்தமான காட்டுகொட்டகையை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் சேதப்படுத்தி சரண்யா மற்றும் அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அதில் இளையராஜா, கண்ணன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
ஜூன் 4 ஆம் தேதி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷ்ரவன்குமார், வாக்கு எண்ணிக்கை அமைதியாகநடைபெற வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.