Kallakurichi

News May 13, 2024

நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேற்றம்

image

கல்வராயன்மலையில் செல்போன் டவர் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது,29 BSNL 4G செல்போன் டவர்கள் (Under USO 4G Saturation Project of Govt. of India) கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த 29 செல்போன் டவர்களில், 9 டவர்கள் மட்டும்(5-5-24) முதல் உடனடி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனை உடனடியாக செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். 

News May 12, 2024

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

image

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தங்கள் பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News May 12, 2024

எடப்பாடியை சந்தித்த எம்எல்ஏ செந்தில் குமார்

image

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இன்று நேரில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

News May 12, 2024

அண்ணன் தம்பி சண்டை தம்பி காவல் நிலையத்தில் புகார்

image

சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வரும் அண்ணன் தம்பியான வேலு மற்றும் ராமர் நேற்று , வேலு தன் மனைவியுடன் தனது காட்டில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது ராமர் அதனை கேட்டு ராமரும் மனைவியும் அசிங்கமாக வேலுவை திட்டி அடுத்ததாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வேலு புகார் கொடுத்துள்ளார் ராமர் மற்றும் மனைவி சித்ரா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்

News May 11, 2024

மே 13ஆம் தேதி கல்லூரி கனவு நிகழ்ச்சி – அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை சிறுவங்கூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அறிவித்துள்ளார்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 11, 2024

தொடர் திருட்டு – மூன்று பேர் கைது

image

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருவங்கூர் மற்றும் மோ.வன்னஞ்சூர் மற்றும் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட ஏமப்பேரை சேர்ந்த ராக்கெட் ராஜா, நாச்சியார்பேட்டையை சேர்ந்த சங்கர், புது குப்பம் மாணிக்கவாசகர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

News May 11, 2024

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

image

ஆலத்தூரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர், ஆர்ச் கேட் பகுதியைச் சேர்ந்த குமார், சக்திவேல் ஆகியோரின் இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அவர்கள் இருவரும் சேர்ந்து ஜேசிபி மூலம் சுற்றுசுவரை இடித்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட பள்ளியின் தாளாளர் உமாவையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் இருவர் மீதும் நேற்று போலீசார்வழக்குபதிவு செய்தனர்

News May 10, 2024

கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

கள்ளக்குறிச்சி 32ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 83.7% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.34 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.85 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

error: Content is protected !!