India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஷ்ரவன் குமார் இன்று ஆய்வு செய்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கள்ளக்குறிச்சியில் இயக்குநர் ஜெகதீசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் உள்ள பாலி பீடரில் நேற்று லாரி மோதி உடைந்த கம்பங்களை இன்று மாற்றும் பணி நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 11 முதல் மதியம் 2 வரை கீழ்க்கண்ட பரிந்தல், கொட்டையூர், நின்னையூர், நெடுமானூர், பூ மலையனூர், புத்தமங்கலம், சிறுவத்தூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிட உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் தேவதாஸ் போட்டியிடுவார் என பாமக தலைமை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலை பகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் இன்று (மார்ச்.22 )ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலுவின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பிச்சமுத்து பச்சையம்மாள் என்பவரது வீடு மின்கசிவினால் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தகவல் அறிந்து இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உடன் இருந்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற கள்ளக்குறிச்சித் தொகுதியில், இந்த முறை திமுக-வின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.