Kallakurichi

News June 9, 2024

மோடியின் பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

image

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் இன்று மாவட்ட பாஜக சார்பில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்ளார். மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பது பாஜகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 9, 2024

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

image

சின்னசேலம் அருகே உள்ள வி அலம்பலம் கிராமத்தில் இன்று மாலை வேப்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஹிட்டாச்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலம்பலம் பகுதி ஏரியில் அருகில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டதால் மனைவி அடித்து கொன்று புதைத்து விட்டார். மேலும் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து கீழ் குப்பம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

News June 8, 2024

ஹிட்டாச்சி டிரைவர் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

image

சின்னசேலம் அருகே உள்ள வி அலம்பலம் கிராமத்தில் இன்று மாலை வேப்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஹிட்டாச்சி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலம்பலம் பகுதி ஏரியில் அருகில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் போது மனைவியிடம் தகராறு ஏற்பட்டதால் மனைவி அடித்து கொன்று புதைத்து விட்டார். மேலும் தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து கீழ் குப்பம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

News June 8, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வரும் ஜூன் 10ம் தேதி தொடங்கி ஜூலை 10ம் தேதி வரை 57 தடுப்பூசி போடும் குழுக்களை கொண்டு இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

கள்ளக்குறிச்சி: சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

image

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால், பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சமூக சேவகர் விருது பெற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நேற்று(ஜூன் 7) மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

ஜமாபந்தி குறித்து ஆட்சியர் தகவல்

image

1433-ம் பசலிக்கான ஜமாபந்தி எதிர்வரும் ஜூன்.12ஆம் தேதி தொடங்கி ஜூன்.28ஆம் தேதி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ள ஜமாபந்தியில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கையை மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அழைப்பு விடுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 7, 2024

பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் வழங்கிய செய்தியாளர்களை இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பிஆர்ஓ பிரபாகரன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

News June 7, 2024

குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் வரும் ஜூன்.10ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.

News June 7, 2024

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணபிக்கலாம்

image

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதிற்கு புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை புரிந்த 5 வயதிற்கு மேற்பட்டு 18 வயதுமிகாத கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் 31.07.2024க்குள் (https://awards.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

கள்ளக்குறிச்சியில் 31.30 மி.மீ மழைப்பொழிவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மலையின் அளவை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று ஜூன் 6-ம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31.30 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!