Kallakurichi

News June 13, 2024

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை(ஜூன்.14) கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் கறவை மாடு தேர்வு செய்தல், கொட்டகை அமைப்பு, இனபெருக்க மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் மற்றும் கால்நடைக்களுக்காண அரசு திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்கு வரும் போது ஆதார் அட்டை நகல் கொண்டு வரவும்.

News June 13, 2024

வாழ்த்து பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தலைமை காவலர்களை சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவியேற்றுக் கொண்ட 15 பேரும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News June 13, 2024

கள்ளக்குறிச்சி: மனுக்களை பெற்றார் ஆட்சியர்

image

சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News June 13, 2024

திருக்கோவிலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கோவிலூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு இன்று அனுப்பி வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 2 லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News June 13, 2024

கள்ளக்குறிச்சி: விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து. இதில், அரசு அதிகாரிகள் பலரும் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News June 12, 2024

கள்ளக்குறிச்சி: முதல்வருடன் முன்னாள் எம்.பி.சந்திப்பு

image

கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்‌கௌதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News June 11, 2024

முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு புதிய பொறுப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமனம் செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

தம்பி வீட்டை அண்ணன் கொளுத்தியதால் பரபரப்பு

image

சின்னசேலம் அருகே இவராவார் காட்டுக்கொட்டாய் பகுதியில் நேற்று இரவு தம்பி வீட்டை அண்ணன் தீ வைத்து கொளுத்தியதால் ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணம் 10 கிராம் தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News June 10, 2024

கள்ளக்குறிச்சியில் படிப்புடன் வேலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் நிறுவன காலனி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது. இப்பணியில் சேர்வதற்காக காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் படிப்பதற்காக தொழிற்கல்வி சேர்க்கை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் இன்று செய்தி தெரிவித்துள்ளார்.

News June 10, 2024

கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு

image

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் கோயில் விழாவுக்கு வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து சுமதி திருநாவலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!