Kallakurichi

News April 14, 2024

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று தமிழர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் தங்கள் வாழ்வில் எண்ணற்ற வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

அதிமுக வேட்பாளர் மீது வழக்குபதிவு

image

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆத்தூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசியுள்ளார். இதுகுறித்த நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக வேட்பாளர் குமரகுரு மீது ஆத்தூர் போலீசார் 2 பிரிவின் கீழ் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News April 14, 2024

கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் எடப்பாடி

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிரச்சாரம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

image

உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் இன்று உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சக்திவேல் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 13, 2024

கள்ளக்குறிச்சி: தேர்தல் புறக்கணிப்பு

image

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சிகளில் 145 கிராமங்கள் உள்ளன. இதில் ஆரம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கெடார், பட்டிவளவு, மனப்பாச்சி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கல்வராயன் மலைப்பகுதியில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2024

கள்ளக்குறிச்சி :உலக சுகாதார தின விழா

image

இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். ஹெல்த் இன்ஸ்டிட்யூட்டில் உலக சுகாதார தின விழா  நேற்று கொண்டாடப்பட்டது. ஆர்.கே.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் தே.கோவிந்தராஜு, இயக்குநர்கள் ம.மனோபாலா, ம.சிஞ்சு, ஆனந் ராம்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஹெல்த் சயின்ஸ் முதலாமாண்டு மாணவி கரிஷ்மா வரவேற்றார்.

News April 12, 2024

கள்ளக்குறிச்சி: ஆணுறை விற்பதற்கு தடை கோரி மனு

image

கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் இன்று திருநங்கைகள் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தாண்டவர் கோவிலில் சில திருநங்கைகள் தவறான வேலைகளில் ஆணுறைகள் விற்பதை ஏற்க முடியாத நிலையில் கூத்தாண்டவர் கோவிலில் பணிவிடை செய்து வரும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் கோவிலில் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்தனர்.

News April 12, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையத்தில் சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து சக்சம் என்ற பிரத்யேக செயலியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 12, 2024

கள்ளக்குறிச்சி: 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜீன் 4ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மார்க் கடைகள், மதுப்பான கூடங்கள் மூடப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News April 12, 2024

கள்ளக்குறிச்சியில் நீதிமன்றம் புறக்கணிப்பு

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நீதிமன்றம் பிரிக்கப்பட்ட பின்பும், போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படாமல் நீதிமன்ற பணிகள் தொய்வடைந்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று முழுவதும் நீதிமன்ற பணிகளில் ஈடுபடாமல் புறக்கணித்துள்ளர்.

error: Content is protected !!