Kallakurichi

News March 16, 2025

மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு

image

அரகண்டநல்லூர், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,15 பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மார்ச் 15) இரவு வெங்கடேசன் தனது வீட்டில் ஜங்ஷன் பாக்சை பிரித்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News March 16, 2025

தூய்மை பணியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க மா.செ

image

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர இளைஞரணி சேர்ந்த மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை‌ அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மதிய உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் இந்த தமிழக வெற்றி கழகத்தைச் கவரை தெரு வார்டு எண் 18 தமிழக வெற்றி கழக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 15, 2025

கள்ளக்குறிச்சி: திருமணத் தடை நீக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியார் கல்லூரியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்து அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 15, 2025

நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான http://villuppuram.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலாளர் அறிவித்துள்ளார்.

News March 15, 2025

கள்ளக்குறிச்சியில் அகழாய்வு நடக்கும் இடங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடத்த திட்டமிடபட்டுள்ளது என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. கள்ளக்குறிச்சியில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறித்து அறியலாம். சேந்தமங்கலம் கோட்டை, தியாக துர்கம் கோட்டை, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிச்சாடனர் சிற்பம் ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்க உள்ளது.

News March 14, 2025

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.

News March 14, 2025

பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News March 14, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை அணுகி ஏலம் எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

மூன்று இடங்களில் நிதிநிலை அறிக்கை நேரலை

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிதிநிலை அறிக்கை தொடர்பான நிகழ்வு நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் பேருந்து நிலையங்களில் நிதிநிலை அறிக்கை நேரலை செய்யப்படுகிறது.

error: Content is protected !!