India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2024-2025 -ம் ஆண்டிற்கு 3,500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.பிரசாந்த் அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகள் ஒப்புதல் பெறுவதற்கு வரும் ஜீன் 30 ஆம் தேதி 412 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 59 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 நபர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை இன்று மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்றதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவரும் ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக முன்னாள் விவசாய பிரிவு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது நீண்ட காலமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அன்று அளித்து பயனடையுமாறு ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாரய உயிரிழப்பு விவகாரத்தில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு என தகவல் வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஆளும் புதுச்சேரியில் இருந்துதான் மெத்தனால் வந்துள்ளதாக தெரிவித்த அவர், திமுக மீது திட்டமுட்டு பழி சொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்தது, பலர் இறந்தும் உள்ளனர் என சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், அகில இந்திய காங்கிரஸின் மௌனம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நட்டா வலியுறுத்தல்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் ரூ.10 லட்சம் வழங்கியது தீய முன்னுதாரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் இளைஞர்களை சோம்பேறியாக மாறியதாகவும், இங்கு பாதி சம்பளம் பெறுபவர்களே மலிவு விலையில் கிடைப்பதை(சாராயம்) குடித்து மாண்டுள்ளதாகவும் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில், இன்று(ஜூன் 24) திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் அனுமதி பெற்று கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 15 ஆவது நபராக அறிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வரை 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று(ஜூன் 23) காலை முதல் அடுத்தடுத்து 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர், மெத்தனாலை மலையடிவார பகுதிகளில் பதுக்குவதற்கு சின்னத்துரைக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.