India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று (4 -7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி இன்று (4-7-2024) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜ், விஜயா மற்றும் சின்னதுரை ஆகியோர், மது அருந்துவோரின் கோரிக்கையை ஏற்று போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தங்களுக்கே அதிர்ச்சி அளிப்பதாகவும் நேற்று சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 58 இடைநிலை, 53 பட்டதாரி மற்றும் 8 முதுகலைப் பட்டதாரிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு பணிநாடுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 10.07.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு மாதத்திற்குள் விசாரணை முடிவடையாத பட்சத்தில் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 58 இடைநிலை, 53 பட்டதாரி மற்றும் 8 முதுகலைப் பட்டதாரிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு பணிநாடுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 10.07.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று(ஜூலை 2) 412 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட முழுவதும் 4000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3 தவணையாக ரூ 3.10 லட்சம் வழங்கப்படும். மேலும், பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்ட ஆணை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தது சாராயம் அல்ல மெத்தனால் கலந்த தண்ணீர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 65 பேர் பலியான சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த பன்ஷில் லால், கவுதம் சந்த் ஆகியோர் வெளிமாநிலத்தில் இருந்து மெத்தானால் வாங்கி விற்க உரிமம் வாங்கியுள்ளனர்.
கல்வராயன் மலைப் பகுதியில் அதிக பிரசவங்கள் மற்றும் 100% மருத்துவமனையில் பிரசவம் பார்த்தமைக்காக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷை பாராட்டி சிறந்த மருத்துவதற்கான விருதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் வழங்கினார். இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்தை நேரில் சந்தித்து மருத்துவர் சுரேஷ் வாழ்த்து பெற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரசாந்த் முன்னிலை வகித்தார். மேலும், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார் சர்மா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.