Kallakurichi

News October 22, 2024

25 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் தரும் சாகுபடி

image

கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் 25 ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் பெற வேண்டும் என்றால் எண்ணெய் பனை சாகுபடி செய்யுங்கள். அதன் மூலம் 100% எண்ணெய் பனை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஹெக்டருக்கு 5250 தான் செலவு ஆகும். ஆகையால், விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News October 21, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (21.10.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம்.

News October 21, 2024

343 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பொதுமக்களிடமிருந்து 331 மனுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 12 மனுக்கள் என 343 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதன் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 21, 2024

சங்கராபுரம் பகுதியை சேர்ந்த நிர்வாகி நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், சங்கராபுரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சன்னியாசி என்பவரை, அதிமுகவின் விவசாய பிரிவின் மாநில துணை செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்து இன்று (அக்டோபர் 21) அறிவித்துள்ளார்.

News October 21, 2024

தொடக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று பள்ளியின் தலைமையாசிரியர் மேற்பார்வையில், தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும், மாணவர்களின் கல்வித் தரத்தை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

News October 21, 2024

கள்ளக்குறிச்சியில்  விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆவது அதில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் இதில் பங்கேற்ற பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 21, 2024

மாவட்ட காவல்துறை சார்பில் மறைந்த காவலர்களுக்கு மரியாதை

image

காவல் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளில் காவலர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அவர்கள் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அரசு மரியாதை உடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 21, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டறங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் அவர்கள் இன்று வழங்கினார். இந்த  நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 21, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.63 உருளைக்கிழங்கு ரூ.60 சின்ன வெங்காயம் ரூ.45-50, பச்சை மிளகாய் ரூ.60 கத்தரிக்காய் ரூ.50 வெண்டைக்காய் ரூ.25 முருங்கைக்காய் ரூ.90 பீர்க்கங்காய் ரூ.60 சுரைக்காய் ரூ.30 புடலங்காய் ரூ.36 பாகற்காய் ரூ.60 முள்ளங்கி ரூ.48 பீன்ஸ் ரூ.180 அவரை ரூ.60.120 கேரட் ரூ.70   பூசணிக்காய் ரூ.30 பரங்கிக்காய் ரூ.30 விற்பனை  செய்யப்படுகிறது.

News October 20, 2024

நமச்சிவாயபுரத்தில் இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு

image

நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது நிலத்தில் இன்று தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது திடீரென இடி தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.