India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர்கள், கணக்கு உதவியாளர், கணக்கு தரவு பதிவாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப படிவம், படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளன. 27 வகையான விளையாட்டுகளுக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், வருகிற ஆகஸ்ட் 16-க்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், மணலூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய வட்டாரங்களில் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். வருமானச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உட்பட 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை மக்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுத்தா அணையில் இந்த ஆண்டிற்கான மீன்பிடி குத்தகை ஏலம் எடுக்க நாளை (ஆகஸ்ட்-7) மாலை 5 மணி வரை இணையதளம் மூலம் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மீன் பாசி வளர்ப்பு ஏலம் தொடர்பான விபரத்தை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (04151-228802) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழாக்களை நடுத்திட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சி.இ.ஓ கார்த்திகா சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.