India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக.27ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் களமருதூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பல்லவாடி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கூர் கிராமத்திலும், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ரிஷிவந்தியம் கிராமத்திலும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை ஏரிகளில் இலவசமாக மண்வெட்டி எடுத்து வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்று மாலைக்குள் ஏரிகளில் இருந்து மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் படை வீரர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேருக்கும் மேற்பட்டவர்கக்ள் இறந்தனர். இவ்வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாதேஷ், சிவகுமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை (கள்ளக்குறிச்சி-1) க்கு தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப சங்கம் கூட்டமைப்பின் மூலம் பெங்களூருவில் வெள்ளி விருது வழங்கப்பட்டது. விருதை சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.கண்ணன் பெற்றுக்கொண்டார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜேஷ்நாராயணன் , துணைத்தலைமை இரசாயணர் கணேசன், உதவி பொறியாளர் (மின்) சிவக்குமார் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். இதில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியனூர், நகர், ஆரிநத்தம், குறும்பூர், நாச்சியார்பேட்டை, கூ.கள்ளக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆரிநத்தம் ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம் என உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.