Kallakurichi

News October 25, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

2 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த நிவாரண உதவித்தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., இன்று (அக்.25) வழங்கினர்.

News October 25, 2024

பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க 2024 – 2025 ஆம் ஆண்டு பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டங்களின் மூலமாக பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 25, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும் புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும், விற்பனை பிரதிநிதி 2 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News October 24, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

image

கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசக்தி என்பவர் 14 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து 8 மாதம் கர்ப்பமாக்கியது தொடர்பாக 09.09.2024-ந் தேதி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மனு மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்து கைது செய்த நிலையில் இன்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 24, 2024

குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு 

image

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 24, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (24-10-2024) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 23, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

மரவள்ளிக்கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

image

கச்சிராயப்பாளையம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் இன்று காலை மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து அதை லாரியில் ஏற்றிக்கொண்டு காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது துரை என்பவரின் காட்டின் அருகே வந்த பொழுது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிழங்குகள் கீழே கொட்டி சேதமானது. ஜேசிபி இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.