Kallakurichi

News September 7, 2024

வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருடிய நபர் கைது

image

வாணியந்தலை சேர்ந்த ராதா என்பவர் நேற்று திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அகரகோட்டாலத்தை சேர்ந்த அஜித்குமார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.

News September 6, 2024

சாலை விபத்தில் வாலிபர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தொட்டி கிராமத்தில் இருசக்கர வாகனம் மற்றும் டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 வயது பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் சென்ற வெங்கட சுபாஷ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 6, 2024

விஷ சாராய மரண வழக்கு ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது?

image

கள்ளக்குறிச்சியில் தவறு நடந்ததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது என அதிமுக நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட வெறும் புகாரின் அடிப்படையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எனவும் அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. வாதங்கள் நிறைவடையாததை அடுத்து விசாரணை செப்.10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

News September 6, 2024

உளுந்தூர்பேட்டையில் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் வரும் செப்.8ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேற்று இரவு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News September 6, 2024

20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் பகுதியில் உள்ள கோடை விழா கலையரங்கத்தில் நாளை செப்டம்பர் 6ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இதில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

News September 6, 2024

3 ஆசிரியர்களுக்கு விருது

image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதி சார்ந்த மூன்று ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களால் இன்று வழங்கப்பட்டது.

News September 6, 2024

ஆதனூர் பள்ளி ஆசிரியருக்கு இராதாகிருஷ்ணன் விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் ஊராட்சி பாச்சாப்பாளையம் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த சூரியகுமார் அவர்கள் தமிழக அரசின் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கரங்களால் விருது பெற்றார்.

News September 5, 2024

அதிமுக வாதம், வழக்கு விசாரணை செப்டம்பர் 10 தேதிக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது, கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அதிமுக வாதம்.தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட வெறும் புகார் அடிப்படையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு மாற்றம்.

News September 5, 2024

மனப்பாச்சி கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

image

வெள்ளிமலை அடுத்த வாரம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பாச்சி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தார்கள். தற்போது அங்கு அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்று கூறி அனைவருமே சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு குடி பெயர்ந்து உள்ளதால் அந்த கிராமத்தில் மனிதர்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.

News September 5, 2024

விசிக தலைவர் நாளை நேரில் ஆய்வு

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!