Kallakurichi

News August 30, 2024

இரவு ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (30.08.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

சட்டமன்ற உறுப்பினரின் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

image

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் மற்றும் ஐந்து நபர்கள் மீது அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்க விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்குகள் தள்ளுபடி செய்யபட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் மற்றும் கழக வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

News August 30, 2024

மகளிர் மாநாட்டை முன்னிட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு

image

தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிக்க, கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாநாட்டை முன்னிட்டு மகளிர் விடுதலை அணியில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகின்றனர் என அக்கட்சியில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

News August 30, 2024

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அரசு ஊழியர்கள்

image

எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க தனிச் சட்டம் இயற்ற கோரி விசிக அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாநில பொறுப்பாளர் சிறைப்பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியரிடம் ஐந்து அம்ச கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில,மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News August 30, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த முதன்மை அமர்வு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா நடமாட்டம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதது ஏன் ? என அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

News August 30, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று மாலை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

விநாயகர் சதுர்த்தி வழிபாடு நெறிமுறைகள் வெளியீடு

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான உரிய அனுமதி பெற வேண்டும், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News August 30, 2024

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடக்கம்

image

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு வரவை பருவத்தை தொடங்கி வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் ப. மோகன், சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் விஷ்ணு மற்றும் விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

கள்ளக்குறிச்சியில் விசிக போராட்டம் ரத்து

image

வாசுதேவனூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை அகற்றிய வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!