India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் 1500 வாக்காளர்களின் தொகுதிகள் பிரிப்பது குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 லாரிகள், 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சி சென்ற லாரியின் பின்புறத்தில் தனியார் பேருந்து மோதியது. அந்த லாரி, உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற மினி லாரி, தனியார் பேருந்து மீது மோதியது. இதில், ஓட்டுநர்கள், தனியார் பேருந்து பயணிகள் என 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 10 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கிழக்கு மருதுாரில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. அப்போது விநாயகர் சிலை ஒன்று உடைந்து சேதமடைந்தது. இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. தகராறு தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது நேற்று திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக மேலும் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் 347 மனுக்களை வழங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மண்மலை, அரசம்பட்டு, மொட்டம்பட்டி, மூக்கனூர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படும். இதேபோல் மூங்கில்துறைப்பட்டு இருதயம்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மூங்கில்துறைப்பட்டு, சுத்தமலை, வடமாமந்தூர், மணலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்த போட்டிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி MP மலையரசன் ஆகியோர் இணைந்து இன்று காலை 10:30 மணி அளவில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.
சின்னசேலம் வட்டம் கீழ்க்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுமங்கலத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஈரியூர் செல்லும் நகரப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வேறு இடத்திற்கு மதுபான கடையை கொண்டு செல்லுங்கள், எங்கள் ஊரில் வேண்டாம் என கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள மவுண்ட் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் சார்பில் பிரசுரமாகும் பட்டம் இதழின் வினாடி-வினா போட்டியினை செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.