India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வெளிமுகமை முறையில் ஒரு சமுதாய அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்திற்கு நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (02.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 491 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பதினாறு மனுக்களும் என மொத்தமாக 507 மனுக்கள் பெறப்பட்டதாகவும், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்ய முடியும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் தங்களின் பிரச்சனைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், இதில், மக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் உள்ள தனியார் மகாலில் இன்று கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கி சிறப்புரைற்றினார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (01.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் மீது இன்னோவா கார் மோதிய விபத்தில் தையல்நாயகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான 10 வயதுக்கு உள்ளான மாணவர்களுக்கான சதுரங்க போட்டியில், நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சார்ந்த, ஜெகத் ஆதித்யா என்ற மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் வங்கி இன்சூரன்ஸ் ஊழியர் ரமணி கொலை செய்யப்பட்ட நிலையில், ரமணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த போது அவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக உதவி ஆய்வாளர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அப்போது உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவரை தற்காலிக பணி நீக்கம் இன்று விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.