Kallakurichi

News September 4, 2024

இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (04.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென் கீரனூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் கடை விற்பனையாளர் பணி நீக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து விற்பனையாளர் ரேஷன் அரிசி வியாபாரியிடம் மூட்டை மூட்டையாக ஆட்டோ மூலமாக ஏற்றி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்  உத்தரவின்படி துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு விற்பனையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு விருது 

image

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வகுமார், ஆரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நிர்மலா மேரி, கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் சூரியக்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கர் உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.

News September 4, 2024

கள்ளக்குறிச்சி அருகே பாஜக நிர்வாகி மீது வழக்கு 

image

சின்னசேலம் அடுத்த கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு. பா.ஜக நிர்வாகி கருந்தலாக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் எவ்வித அரசு அனுமதியின்றி பா.ஜ கொடி கம்பம் அமைத்துள்ளார். இது குறித்து அறிந்த வி.ஏ.ஓ., ரங்கசாமி கீழ்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பா.ஜ., நிர்வாகி செல்வராசு மீது போலீசார் நேற்று (செப் 3) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 4, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அறிவிப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை எளிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 4, 2024

உயர் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாளை காலை 10 மணி அளவில் கடுமையாக கை கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுய தேவைக்கு உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ள மாதாந்திர உதவித்தொகையுடன் உயர் உதவித்தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி இன்று அறிவித்துள்ளார்.

News September 3, 2024

வழித்தடத்தை மறைத்து வேலி அமைத்த மர்மநபர்

image

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை அருகே ராஜேஸ்வரி கார்டன் கனகனந்தல் சாலையில் பொது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான வழித்தடத்தை மறைத்து மர்மநபர் ஒருவர் வேலி அமைத்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வழிநடத்த பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான வழித்தடத்தை மறைத்து வேலி அமைத்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News September 3, 2024

உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சியில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதி உடையவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2024

முன்னாள் விளையாட்டு வீரர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தேசிய அளவில் மாநில அளவில் விளையாட்டில் சிறந்த வீரர்களாக விளங்கியவர்கள் தற்போது நலிவடைந்து உள்ளவர்கள் தமிழக அரசின் உதவித்தொகை 6000 ரூபாய்க்கு விண்ணப்பிக்கலாம் அவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!