India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வராயன்மலையில் மதுவிலக்கு காவல் நிலையம் அமைக்க விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போலீசார் கல்வராயன்மலைக்கு சென்று அங்கு தகவல் சேகரிப்பது கடினமாகவே இருந்து வருகிறது. இதனால், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் கல்வராயன்மலையிலேயே மதுவிலக்கு காவல் நிலையம் ஒன்று புதியதாக தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (27.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டிற்கு திருச்சியிலிருந்து வந்த தொண்டர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே சேக்உசேன்பேட்டையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த தடுப்பில் கார் மோதி 10அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்தின் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று (அக்.27) தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருந்தார். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 19 வருவாய் துறை துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி தேர்தல் துணை வட்டாட்சியர் அண்ணாமலை வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும் என 19 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றி வந்த 12 வருவாய் வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன் கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியராக என 12 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உள்ளதால் யாரும் ஆற்றின் பக்கம் வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக இன்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தின் வதந்திகளை நம்ப வேண்டாம். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.