Kallakurichi

News September 22, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; பெண் மரணம்

image

மேல்நாரியப்பனூரை சேர்ந்த அம்மணி அம்மாள் ஆத்தூரில் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக வி.கூட்ரோடு பகுதியில் பாலத்தின் கீழ் பேருந்து ஏறுவதற்காக இன்று நடந்து செல்லும் போது சேலத்தில் இருந்து சிதம்பரம் சென்ற அரசு பேருந்து திரும்பும் போது அம்மணி அம்மாள் மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றுள்ளது. இதில் அம்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 22, 2024

கள்ளக்குறிச்சி காவலர்கள் வெற்றி பெற்றனர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2024-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாவட்ட காவல்துறை சார்பில், வாலிபால் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி சந்தித்து வாழ்த்தினார்

News September 22, 2024

கல்வராயன்மலை 15 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சோத்தூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் அவர் சோத்தூர் கிராமத்தில் சென்று சோதனை செய்த போது அங்கு தங்கவேல் என்பவர் வீட்டின் பின்புறத்தில் 15 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து 15 லிட்டர் சாராயத்தை சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர் தங்கவேல் கைது செய்தனர்

News September 22, 2024

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை காண அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

News September 21, 2024

கல்வராயன்மலை சின்ன திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம்

image

கல்வராயன்மலை அடுத்த வெள்ளிமலை மேல் பாச்சேரி சின்ன திருப்பதி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. கல்வராயன் மலை, கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பெருமாளை தரிசானம் செய்தனர்.

News September 21, 2024

21 உதவி ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், பகண்டை கூட்டுரோடு, கச்சிராயபாளையம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 21 உதவி ஆய்வாளர்களை பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 21, 2024

கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 21, 2024

4 வாரங்களுக்குள் கூடுதல் பேருந்துகள் இயக்க உத்தரவு

image

கல்வராயன்மலை பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு கூடுதல் இனி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

News September 21, 2024

கள்ளக்குறிச்சியில் மின்தடை ரத்து

image

கள்ளக்குறிச்சி துணை மின்நிலையத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று மேற்கொள்ளப்பட இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் இன்று அறிவித்துள்ளார். மாற்றுத் தேதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!