India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்திரை பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனர். 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கடைத்தெரு பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு சரண்யா என்பவர் அடகு வைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்தபோது நகை போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் இன்று சுமார் 1/4 மணி நேரத்திற்கு மேலாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். இதில், காலி குடங்களுடன் சிறுவர்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சாலையில் வரிசையாக குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் கடந்த சில நாட்களை விட வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி வெப்ப அலையும், அதிக அளவில் வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இன்று 105 டிகிரி செல்சியஸ் முதல் 109 டிகிரி செல்சியஸ் வரை கடும் வெப்பம் நிலவியது.
உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.
பெங்களூர் ஜெபின் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், மனைவி சரஸ்வதி. இவர் நேற்று வடபொன்பரப்பில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்திருந்தார். மீண்டும் பெங்களூருக்கு செல்ல நேற்று காலை வடபொன்பரப்பி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது பஸ் வேகமாக சென்றதில் நிலை தடுமாறி சரஸ்வதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமியின் உடல் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (21.04.2024) எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அன்னாரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் தேர்தல் பணிக்காக தங்க வைக்கப்பட்ட ரிசர்வ் ஆபீசர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு டீ காபி மற்றும் உணவு தரவில்லை எனவும் – தேர்தல் பணிக்கு வந்த தங்களுக்கு சம்பளம் வழங்கப்பட முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்காண வாக்கு எண்ணும் மையம் சின்னசேலம் அருகே உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா உடன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.