India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் மனித முக அமைப்புடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த அதிசயம் நடந்துள்ளது. ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஈன்ற 2 குட்டிகளின் ஒரு குட்டி மனித முக அமைப்புடன் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசயத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு வியந்தனர். இன்னும் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!
இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், தரம் பிரிக்கும் இயந்திரம், மெழுகு பூசும் மைய உட்கட்டமைப்புக்கு கடன் பெறலாம்.
கள்ளக்குறிச்சியில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ. 2 கோடி கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம், அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர்,மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
கச்சிராயபாளையம் செல்லும் வழியில், குதிரைசந்தல் பேருந்து நிறுத்தம் அருகே, எலியத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மீது, எதிரே வந்த மாத்தூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் கார் மோதியது. இதில் கார்த்திகேயனின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் சுரேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கள் கிழமை (11.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவரான அர்த்தநாரீஸ்வரர், பாதி சிவன் மற்றும் பாதி பார்வதி என ஒரே சிலையில் காட்சியளிக்கிறார். சிவனின் வலதுபுறமும், பார்வதியின் இடதுபுறமும் ஒரே சிலையில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சமாகும். இங்கு வழிபட்டால் மகிழ்ச்சியும், திருமணத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!
ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.