Erode

News November 6, 2024

ஈரோட்டில் மாநில தடகள போட்டிகள் இன்று துவக்கம்

image

ஈரோடு மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள் ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10 மணிக்கு போட்டிகள் துவங்குகிறது. இதில் 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ-மாணவியர் 8,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

News November 6, 2024

Breaking ஈரோட்டில் பஸ் லாரி மோதி விபத்து: 12 பேர் காயம்

image

பெருந்துறை அடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஏரி கருப்பராயன் கோவில் அருகே இன்று காலை கோவை டூ ஈரோடு செல்லும் தனியார் பேருந்தும் விறகு ஏற்றிக் கொண்டு சென்ற லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2024

ஈரோடு மாணவி அனைத்திலும் தங்கம்

image

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி ஈரோடு வஉசி பூங்காவில் நேற்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஈரோடு யூஆர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கௌசிகா என்ற மாணவி நான்கு பிரிவுகளில் பங்கேற்று நான்கு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு முதல்வர், பள்ளியின் தாளாளர், மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News November 6, 2024

ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியிடம் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு erode.nic.in என்ற ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் நவம்பர் நவ.15ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 6, 2024

ஈரோடு பேருந்து நிலையத்தில் கலெக்டர் விசிட்

image

ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4, வார்டு எண்.53, இரயில்வே காலனி உயர்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கட்டப்பட்டுவரும் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணி குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் மாநகராட்சி ஆணையாளர் மனீஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 6, 2024

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை, ஈரோடு கலெக்டர் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு செய்தார். இதில் சோலார் – புதிய பேருந்து நிலையம், ரங்கம்பாளையம் – நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி, பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணி, கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

News November 6, 2024

ஈரோட்டிற்கு 2000 டன் நெல் மூட்டைகள் 

image

நாகப்பட்டினம், நீடாமங்கலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக இன்று ரயில் மூலம் ஈரோடு கொண்டுவரப்பட்டன. அவற்றை பொது வெளியாகத் திட்ட அதிகாரிகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வந்தனர். இதனையடுத்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டன.

News November 5, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ ஈரோட்டில் நவம்பர் 22, 23, 24ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாய கண்காட்சி நடைபெறவுள்ளது. ➤ மொடக்குறிச்சியில் அரசு பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ➤ ஈரோட்டிற்கு ரயில்களில் 2000 டன் நெல் மூட்டைகள் வந்தன. ➤ மொடக்குறிச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

News November 5, 2024

அரசு பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சி, பாரதி நகரை சேர்ந்த தம்பதி அமரேஸ்-ராணி. இந்நிலையில், இன்று ராணி தனது மகன் அபினவை (5) பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அபினவ் காயங்களுடன் உயிர் தப்பினார்.

News November 5, 2024

மாபெரும் விவசாய கண்காட்சி

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை – சக்தி திருமண மண்டபத்தில் (பேருந்து நிலையம் பின்புறம்) மாபெரும் விவசாய கண்காட்சி 2024, நவம்பர் 22, 23, 34 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் விவசாய பொருட்கள், உணவு பொருட்கள், மாடித் தோட்ட விதைகள், தானியங்கள், பால் பண்ணை பொருட்கள், இயற்கை உரங்கள், இடுபொருட்கள், விவசாய எந்திரங்கள், கால்நடை வளர்ப்பு போன்றவை இடம்பெற உள்ளது.