India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் சிபிஎம் ஆதரவளிக்கும் என மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் வேட்பாளர் யார் என்பது குறித்து, காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக முதல்வருடன் ஆலோசித்து, விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படக்கூடாது போன்ற உத்தரவுகள் தேர்தல் ஆணையம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் சிலைகள், தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் ஆயத்தமாகியுள்ளனர்.
ஈரோட்டில் பிப் 5ஆம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 26 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இன்று(7.1.25) தேர்தல் ஆணையர் அறிவிக்கவுள்ளார். இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்துடன் ஈரோட்டிற்கும் இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் சார்பில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். அதன்படி 9,55,356 ஆண்கள், 10,21,871 பெண்கள், 192 திருநங்கைகள் என மொத்தம் 19,77,419 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பொள்ளாச்சி மைசூர் தேசிய நெடுஞ்சாலை, தமிழக எல்லையான, புழிஞ்சூர் சோதனை சாவடி அருகே, கர்நாடக மாநிலத்தில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி ஒன்று வந்தது. அப்போது, மதுபோதையில் நடந்து வந்த, புழிஞ்சூர் தொட்டி பகுதியைச் சேர்ந்த கோனூர் ஆன் என்பவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே புது வள்ளியம்பாளையத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.கோபிசெட்டிபாளையம் அடுத்த அளுக்குளியை சேர்ந்த விவசாயி பழனிவேல் (60) என்பவர் தனக்கு சொந்தமான 2.26 ஏக்கர் நிலத்தை, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தானமாக வழங்கினார். இதற்கான பத்திரத்தை வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசனிடம் வழங்கினார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று (6.1.25) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையை அவர் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.