Erode

News November 7, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சென்னிமலையில் இரவு சூரசம்ஹார நிகழ்வு ➤ஆசிரியர் உயிரிழப்பு: அமைச்சர் இரங்கல் ➤ஈரோட்டில் மாநில அளவிலான தடகளப் போட்டி ➤பாதுகாப்பை பலப்படுத்த 428 கண்காணிப்பு கேமராக்கள் ➤ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி ➤பச்சை மலையில் மண்சரிவு: வாகனங்கள் செல்ல தடை

News November 7, 2024

ஆசிரியர் உயிரிழப்பு – அமைச்சர் இரங்கல்

image

அந்தியூர், சுண்டப்பூர் மலைக் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் அந்தோணி ஜெரால்ட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் உயிரிழந்ததற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

News November 7, 2024

திண்டல் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு

image

திண்டல் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது. கடந்த இரண்டாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி மூன்று வேலையும் சிறப்பு ஆதாரனை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை திருக்கோயிலில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சுகுமார், மற்றும் அரங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

News November 7, 2024

ஈரோடு: மாதம் ரூ.16,000 ஊதியத்துடன் இலவச பயிற்சி

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி வழங்குகிறது. இதில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சான்றிதழுடன் மாத ஊதியம் 16,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். ஈரோட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 80728-28762, 90258-08570 அழைக்கலாம்.

News November 7, 2024

ஈரோடு பச்சை மலையில் மண்சரிவு: வாகனங்கள் செல்ல தடை

image

கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால், பச்சைமலை மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே, கிழக்கு பகுதியில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் அவ்வழியே வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என கோவில் கமிட்டியினர் கூறுகின்றனர்.

News November 6, 2024

விளையாட்டு போட்டிகள் துவக்கம்

image

ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 5227 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 65-வது மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கார், மாநகராட்சி ஆணையாளர் மனீஷ், மேயர் நாகரத்தினம், ஈரோடு எம்.பி., பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.

News November 6, 2024

பாடம் நடத்தும்போதே மாரடைப்பு – ஆசிரியர் உயிரிழப்பு

image

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டபூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் அந்தோணி ஜெரால்டு(49).  இவர் இன்று பள்ளிகள் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மயங்கி விழுந்தார். உடன் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 6, 2024

ரேஷன் கடையில் வேலை

image

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இப்பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் https://drberd.in/ என்ற இணையதளம் மூலமாக நாளை மாலைக்குள் (நவம்பர் 7) விண்ணப்பிக்கலாம். 

News November 6, 2024

கோபி முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

image

கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், பச்சைமலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவத் திருவிழா நவம்பர் 2ஆம் தேதி வெகு சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் தினசரி ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் தினசரி நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளை காலையும், சூரசம்ஹாரம் நாளை மாலையும் நடைபெற உள்ளது.

News November 6, 2024

பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

image

பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 8,463 கன அடியாக இருந்த நீர்வரத்து 11 ஆயிரத்து 368 கன அடியாக நேற்று உயர்ந்தது. அணை நீர்மட்டம், 94.88 அடி, நீர் இருப்பு, 24.9 டி.எம்.சி.யாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 1,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.