India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட, துணை ராணுவ படை வீரர்கள், 240 பேர் நாளை வரவுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் நெய்வேலியில் இருந்து தலா 80 பேர் என, 240 துணை ராணுவ படை வீரர்கள் வருகின்றனர். ஈரோட்டில் கருங்கல்பாளையம் உள்ளிட்ட 12 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும், 160 துணை ராணுவ படை வீரர்கள் விரைவில் வருவார்கள் என்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து, அமைச்சர் சு.முத்துசாமி சூரியம்பாளையம் பகுதியில் இன்று (ஜன.19) காலை வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்த அமைச்சர், முத்துசாமி, அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் முடிந்ததும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ்குமார் ஜாங்கிட் தலைமையில், தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு கூட்டம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஜன.21) காலை11 மணிக்கு நடக்கிறது. இதில் ஜன.10 முதல் 20 வரை உள்ள செலவின கணக்குகள் தொடர்பான ஆய்வு செய்யப்படுகிறது. வேட்பாளர்களின் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நாம் தமிழா் கட்சி விலக வேண்டும் என பேரம் பேச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். இதுதொடர்பாக அவா் அளித்த பேட்டியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரை நேரில் சந்தித்தது கூட இல்லை. போட்டியிலிருந்து விலக வேண்டும் என திமுகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவலிபாளையம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி கூட்டம் பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி ஏ பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரப்பாடி கண்டிசாலை வரபாளையம் காவலிபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி முகவர்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
சைபர் குற்றவாளிகள் போலீஸ் அதிகாரி போல் போலி அழைப்புகள் மூலம் தனி நபர்களை அச்சுறுத்தி அச்ச உணர்வை உருவாக்கி பணத்தை ஏமாற்றுகிறார்கள். தெரியாத நபர்களின் வீடியோ அழைப்புகளை ஒருபோதும் ஏற்காதீர்கள். பொதுமக்கள் சைபர் கிரைம் புகாருக்கும் https://cybercrime.gov.in என்ற இணையதளம் மற்றும் சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930ஐ அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட சைபர் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஈரோடு அருகே வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் கோழிப்பண்ணையில் நேற்று இரவு தீ பற்றியது. தகவலறிந்த வந்த ஈரோடு தீயணைப்புதுறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதில், 2500 கோழிக்குஞ்சுகள் உட்பட ரூ. 15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தீவிபத்து மின்கசிவினால் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் திமுக, நாதக உள்ளிட்ட 55 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறவருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது. பின் ஜன.,20 மாலை 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெறலாம். பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஓதுக்கீடு செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் தேர்தல் விதிமுறை மீறியதாக 5 வழக்கு பதிவும், சியுஜி செயலி மூலம் 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவில் 25 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டிக்கு, ஈரோடு அணிக்கான வீரா்கள் தோ்வு இன்று (சனிக்கிழமை), ஈரோடு வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 1999 செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின் பிறந்த வீரர்கள், விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்கலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.