Erode

News January 20, 2025

ஈரோட்டில் குவிந்த ராணுவ வீரர்கள்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.5 நடக்கிறது. இதில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுவதற்காக ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை ரயில் மூலமாக ஈரோட்டுக்கு வந்தனர். அவர்கள் வாகன சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியிலும், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News January 20, 2025

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 47 பேர் போட்டியிடுகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கியுள்ளது.

News January 20, 2025

ஈரோடு கிழக்கு: ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாதக தைரியமாக எதிர்த்து நிற்கிறது. முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்ட அமைச்சர் முத்துச்சாமி, பிரச்சாரத்துக்கு வருவது பற்றி கேட்டிருக்கிறார். நீங்களே பார்த்துக்கலாமே! நான் வரணுமா என்ன? என்று ஸ்டாலின் கேட்டிருப்பதால் பிரச்சாரத்துக்கு செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது.

News January 20, 2025

வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியானது. இத்தேர்தலுக்கான வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவசாகம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 47 பேர் பேட்டியிடுகின்றனர். திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உட்பட 47 பேர் களத்தில் உள்ளனர். இத்தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2025

திடீரென மனம் மாறிய செந்தில்முருகன் வேட்புமனு வாபஸ்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த, அதிமுக நிர்வாகி செந்தில் முருகன், இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற இன்று கடைசி என்பதால் மனுவை திரும்பப்பெற்றார். முன்னதாக கட்சியின் அறிவிப்பை மீறி தேர்தலில் போட்டியிட்டதற்காக, அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

News January 20, 2025

ஈரோடு: இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்று, மாவட்ட தேர்தல் அதிகாரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு இனி சுற்றியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துள்ளார்.

News January 20, 2025

ஈரோடு: 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

image

கோபி அருகே உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (36). இவரது மகள் அட்சயா (வயது 10). இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அட்சயா மனவேதனை அடைந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முந்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அட்சயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2025

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், ஜன.17 நிறைவு பெற்றது. ஜன.18 பரிசீலனை நிறைவடைந்தது. இதில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று (ஜன.20) மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது. எத்தனை வேட்பாளர்கள் போட்டி என்பது இன்று தெரிந்துவிடும்.

News January 20, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: அண்ணாமலை பேட்டி!

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் வரும். நியாய படி இது போன்ற தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்த கூடாது. இடைத்தேர்தல் நடத்தலாம். இடைத்தேர்தலுக்கு இடை தேர்தலா? மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். நாங்கள் போட்டியிட்டால் நேர்மையாக தேர்தல் நடத்துவார்களா? இந்த இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம்” என்றார்.

News January 20, 2025

ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நேற்று நிறைவு பெற்றது. இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் சென்றிருந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்களுக்காக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்து கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன.

error: Content is protected !!