Erode

News January 21, 2025

யாரையும் தடுக்கவில்லை: அமைச்சர் 

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியின் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ஈரோடு திமுக அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன 21) தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முத்துசாமி, “அவர்களுடைய பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு எள்ளளவும் இல்லை. நாங்கள் முறையான அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்கிறோம் என்றார்.

News January 21, 2025

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் உள்ள பிவிபி மேல்நிலைப்பள்ளிக்கு இன்று மதியம், கல்வி நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின் பள்ளி நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2025

ஈரோடு: பொது விடுமுறை அறிவிப்பு!

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிடப்பட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், இடைத்தேர்தல் நடைபெறும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, அலுவலகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும், பிப்ரவரி 5ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்த செந்தில் முருகன், தனித்து போட்டியிட முடிவு விடுத்து வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், இன்று காலை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்.

News January 21, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது. நேற்று மதியம் வரையும் 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்பவரது வேட்புமனு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, நேற்று இரவு நிராகரிக்கப்பட்டதால் மொத்தம் தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

News January 21, 2025

காலையில் வெளியான இறுதி வேட்பாளர் பட்டியல்

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதால், நள்ளிரவு வரை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இன்று காலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

News January 21, 2025

3 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், 58 வேட்பாளா்கள், 65 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். கடந்த 18 தேதி நடைபெற்ற பரிசீலனையில் 3 வேட்பாளா்கள் மனுக்கள் தள்ளுபடியாயின. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற, இறுதி நாளான திங்கள்கிழமை மேலும் 8 போ் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதியில், 47 வேட்பாளா்கள் போட்டியில் உள்ள நிலையில், 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

News January 21, 2025

ஈரோட்டில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல், மாலை 4 வரை, பெருந்துறை, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள், புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், கடம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகள், மாக்கினாங்கோம்பை, அக்கரை கொடிவேரி, வரதம்பாளையம், புளியங்கோம்பை, பெரிய கொடுவேரி, சிவகிரி, சென்னம்பட்டி, கூகலூர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News January 21, 2025

ஈரோடு மாவட்டத்தில் இசைக்கல்வெட்டுகள்

image

ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள நாகமலை குன்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இசைக்குறிப்புக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த இசைக் கல்வெட்டுகள் ஐந்தெழுத்துக்கள் இடமிருந்து வலமாகவும், ஐந்தெழுத்துக்கள் மேலிருந்து கீழாகவும் என்ற வகையில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டில் த-தை-தை என்பன போன்ற இசையமைதிகளுக்கான குறிப்புகள் (ஸ்வரங்கள்) உள்ளதாக இம்மலையின் முன்புறமுள்ள பலகை கூறுகிறது.

News January 20, 2025

ஈரோடு கிழக்கு: ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்ட நிலையில், நாதக தைரியமாக எதிர்த்து நிற்கிறது. முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்ட அமைச்சர் முத்துச்சாமி, பிரச்சாரத்துக்கு வருவது பற்றி கேட்டிருக்கிறார். நீங்களே பார்த்துக்கலாமே! நான் வரணுமா என்ன? என்று ஸ்டாலின் கேட்டிருப்பதால் பிரச்சாரத்துக்கு செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது.

error: Content is protected !!